செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தித் திரைப்படங்களை உருவாக்கும் முயற்சியில் எலான் மஸ்க்கின் க்ரோக் நிறுவனம் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. இதன் ஒரு பகுதியாக பண்டைய கிரேக்கக் காப்பியமான ‘ஒடிஸி’யை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படத் தொடரின் முதல் 7 நிமிடக் காணொளியை க்ரோக் இமேஜின் வெளியிட்டுள்ளது.
முழுநீளத் திரைப்படத்தை உருவாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தக் காணொளி வெளியாகியுள்ளது. எலான் மஸ்க்கின் செயற்கை நுண்ணறிவு நிறுவனமான எக்ஸ்ஏஐ உருவாக்கிய க்ரோக் இமேஜின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்தக் காணொளி உருவாக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு, 2026-ம் ஆண்டு இறுதிக்குள் ‘ஒடிஸி’ காப்பியத்தை அடிப்படையாகக் கொண்ட முழுநீளத் திரைப்படத்தைச் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக மஸ்க் தெரிவித்திருந்தார். தற்போது வெளியாகியுள்ள 7 நிமிடக் காணொளி அந்த முயற்சியின் தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது.

