உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சென்ற வாகன அணிவகுப்பில் ஐந்து வாகனங்கள் ஆம்புலன்ஸ் மீது மோதியதில் பலர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் சுல்தான்பூர் மாவட்டத்தில் உள்ள ஹலியாபூர் பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளது. 2018ஆம் ஆண்டு தொடரப்பட்ட அவதூறு வழக்கில் தீர்ப்பு அறிவிக்கப்பட இருந்ததால், அவர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகச் சென்றார். அப்போது, ராகுல் காந்தியின் வாகன அணிவகுப்பின் பின்பகுதியில் வந்த ஐந்து வாகனங்கள் ஆம்புலன்ஸ் மீது மோதியதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐந்து வாகனங்கள் ஆம்புலன்ஸ் மீது மோதியதில் பலர் காயமடைந்தனர். இந்த விபத்தில் ராகுல் காந்தி பாதுகாப்பாக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

