99.55% எழுத்தறிவு: தேசிய அளவில் விருது வென்ற இமாச்சலப் பிரதேசம்!

இமாச்சலப் பிரதேசம் 99.55 சதவீத எழுத்தறிவு விகிதத்தை எட்டி, நாட்டில் கோவாவுக்கு அடுத்த அதிக எழுத்தறிவு கொண்ட மாநிலமாக உருவெடுத்துள்ளது. இந்த சாதனைக்காக சர்வதேச எழுத்தறிவு தினத்தையொட்டி மாநிலத்திற்கு தேசிய அளவிலான விருது வழங்கப்பட்டுள்ளது.

2026-ம் ஆண்டு சர்வதேச எழுத்தறிவு தினத்தையொட்டி டெல்லியில் நடைபெற்ற தேசிய நிகழ்ச்சியில், இமாச்சலப் பிரதேசத்தின் சார்பில் கல்வி அமைச்சர் ரோஹித் தாக்கூர் தேசிய விருதை பெற்றுக்கொண்டார். மாநிலத்தின் கல்வி முன்னேற்றத்திற்கு ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் ஆற்றிய பங்களிப்பை அவர் பாராட்டினார்.

தற்போது இமாச்சலப் பிரதேசத்தின் எழுத்தறிவு விகிதம் 99.55 சதவீதமாக உள்ளது. 99.7 சதவீதத்துடன் கோவா முதலிடத்திலும், இமாச்சல் 2-வது இடத்திலும் உள்ளது. 2025 செப்டம்பர் 8-ம் தேதி, 99.3 சதவீத எழுத்தறிவு விகிதத்துடன் இமாச்சலப் பிரதேசம் முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாக அறிவிக்கப்பட்டது.

அதன் பின்னர் எழுத்தறிவு விகிதம் மேலும் உயர்ந்து தற்போது 99.55 சதவீதத்தை எட்டியுள்ளது. 2026-27 நிதியாண்டில் 100 சதவீத எழுத்தறிவை எட்டுவது அடுத்த இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial