முன்னாள் முதல்வர் நிதிஷ் குமாருக்கு ஆதரவாக இருந்தபோது 9 பேரைக் கொலை செய்தேன் என எம்.எல்.ஏ அனந்த் சிங் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
பீகாரின் ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் அனந்த் குமார் சிங், நிதிஷ் குமாருடன் நீண்டகால அரசியல் தொடர்பு இருப்பதாக அனந்த் சிங் குறிப்பிட்டார். நிதிஷ் குமாருக்கு அரசியல் ரீதியாக உதவிய காலத்தில் 9 பேர் கொலை செய்துள்ளேன் என்றும், அவர் அரசியல் ரீதியாக வலுவடையப் போராடியபோது தாம் அவருக்கு ஆதரவாக இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். அவரது இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கு அந்தக் கட்சியின் தலைவர் சக்தி சிங் யாதவ் கூறுகையில், இந்தக் கருத்துகளைப் பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை என்று தெரிவித்தார். இருப்பினும் சர்ச்சை தீவிரம் அடைந்தது. சர்ச்சை தீவிரமடைந்த நிலையில், அனந்த் சிங் தனது முந்தைய கருத்தை மாற்றி விளக்கம் அளித்தார்.
லாலு பிரசாத் யாதவ் முதல்வராக இருந்த காலத்தில் தனது கூட்டாளிகள் 9 பேர் கொல்லப்பட்டதாகவும், தானும் துப்பாக்கியால் சுடப்பட்டதாகவும் அவர் கூறினார். நிதிஷ் குமாருடன் அரசியல் ரீதியாக தொடர்பு இருந்த காரணத்தால் லாலு யாதவ் ஆட்சிக் காலத்தில் தங்களுக்குப் பாதிப்புகள் ஏற்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

