ஆப்பிளின் புதிய iPhone 18 Pro மற்றும் iPhone 18 Pro Max ஸ்மார்ட்போன்களின் இந்திய விற்பனை இன்று, செப்டம்பர் 18-ம் தேதி தொடங்கியது. ஆன்லைன் மற்றும் நேரடி விற்பனை நிலையங்களில் விற்பனை நடைபெற்று வருகிறது.
புதிய மாடல் ஐபோனை வாங்குவதற்காக டெல்லி, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் உள்ள Apple Store-களில் வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பெங்களூருவில் அதிகாலை 5 மணிக்கே வாடிக்கையாளர்கள் வந்ததாகவும், நொய்டாவில் ஒருவர் காலை 6 மணி முதல் வரிசையில் காத்திருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் iPhone 18 Pro மாடலின் ஆரம்ப விலை ரூ.1,64,900. சேமிப்பு திறனைப் பொறுத்து விலை மாறும். iPhone 18 Pro Max மாடலின் 256GB பதிப்பின் விலை ரூ.1,79,900 முதல் தொடங்குகிறது. அதிகபட்சமாக 2TB பதிப்பின் விலை ரூ.3,29,900 ஆக உள்ளது.
ரூ.7,000 வரை உடனடி கேஷ்பேக்
புதிய iPhone மாடல்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு வங்கி கிரெடிட் கார்டுகளில் ரூ.7,000 வரை உடனடி கேஷ்பேக் வழங்கப்படுகிறது. American Express, Axis Bank, ICICI Bank மற்றும் SBI கார்டுகளுக்கு இந்த சலுகை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழைய ஐபோனை எக்ஸ்சேஞ்ச் செய்யும்போது ரூ.81,500 வரை மதிப்பு கிடைக்கலாம். பழைய ஐபோனின் நிலையைப் பொறுத்து எக்ஸ்சேஞ்ச் மதிப்பு மாறும். இதுதவிர,6 மாதங்கள் வரை No-Cost EMI வசதியையும் வழங்கப்படுகிறது.
புதிய iPhone-களில் முக்கிய அம்சங்கள்
iPhone 18 Pro மற்றும் iPhone 18 Pro Max ஆகியவை A20 Pro சிப் மூலம் இயக்கப்படுகின்றன. கேமரா பிரிவில் 48MP Fusion Main கேமரா வழங்கப்பட்டுள்ளன. இந்த மாடல்கள் Black, Silver, Glacier மற்றும் புதிய Burgundy வண்ணங்களில் கிடைக்கின்றன.
எங்கு வாங்கலாம்?
iPhone 18 Pro மற்றும் Pro Max ஆகியவற்றை Apple-ன் அதிகாரப்பூர்வ ஆன்லைன் ஸ்டோர் மூலமாகவும், இந்தியாவில் உள்ள Apple Store-களிலும் வாங்கலாம். மேலும் Amazon, Flipkart, Croma, Reliance Digital, போன்ற விற்பனை நிறுவனங்களிலும் புதிய மாடல்கள் கிடைக்கின்றன.

