HomeLifestyleநட்ஸை ஊறவைத்து சாப்பிட்டால்தான் அதிக நன்மையா? எப்படி சாப்பிட்டால் நல்லது?

நட்ஸை ஊறவைத்து சாப்பிட்டால்தான் அதிக நன்மையா? எப்படி சாப்பிட்டால் நல்லது?

பாதாம், வால்நட், முந்திரி, பிஸ்தா, வேர்க்கடலை உள்ளிட்ட நட்ஸ்களை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு, புரதம், நார்ச்சத்து மற்றும் பல்வேறு வைட்டமின்கள் நிறைந்த உணவுகளில் நட்ஸ் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன. ஆனால், நட்ஸை ஊறவைத்து சாப்பிடலாமா? வறுத்து சாப்பிடலாமா? எப்படி சாப்பிட்டால் உடலுக்கு நன்மைகள் கிடைக்கும் என பலகேள்விகள் நமக்கு தோன்றும். இதை பற்றி தெளிவாக இதில் பார்ப்போம்.

நட்ஸை ஊறவைத்து சாப்பிட்டால்தான் ஆரோக்கியமா?

பலர் பாதாமை இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் சாப்பிடுவது நல்லது என்று நம்புகின்றனர். இதனால் Phytic Acid போன்ற எதிர்-ஊட்டச்சத்துகள் குறைந்து, சத்துக்கள் எளிதாக உடலில் உறிஞ்சப்படும் என்ற கருத்தும் உள்ளது. ஆனால் தற்போதுள்ள ஆய்வுகளின்படி, சாதாரணமாக வீட்டில் ஊறவைக்கும் முறையால் Phytic Acid குறிப்பிடத்தக்க அளவில் குறைகிறது என்பதற்கு வலுவான ஆதாரம் இல்லை.

இருப்பினும், ஊறவைத்த நட்ஸ் மென்மையாக இருப்பதால், மென்று சாப்பிட எளிதாக இருக்கும். சிலருக்கு செரிமானத்திற்கு உதவியாக இருக்கும். எனவே ஊறவைத்து சாப்பிடுவது ஒரு விருப்பம் மட்டுமே. கட்டாயம் அல்ல.

இதையும் படிங்க : சர்க்கரையை முற்றிலும் தவிர்ப்பவரா நீங்கள்? எச்சரிக்கும் புதிய ஆய்வு

வறுத்து சாப்பிட்டால் சத்துக்கள் அழிந்துவிடுமா?

லேசாக வறுப்பதால், புரதச்சத்து நல்ல கொழுப்பு நார்ச்சத்து தாதுக்கள் பாதிக்காது. ஆனால் மிக அதிக வெப்பத்தில் நீண்ட நேரம் வறுத்தால், வைட்டமின் E போன்ற சில வெப்ப உணர்திறன் கொண்ட சத்துகள் மற்றும் சில ஆன்டிஆக்ஸிடன்ட்களின் அளவு குறையும்.

நட்ஸ் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்குமா?

நட்ஸ்களில் கலோரி அதிகம் இருப்பது உண்மை. ஆனால், அதனால் மட்டுமே உடல் எடை அதிகரிக்கும் என்று கூற முடியாது. நட்ஸ் நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வை அளிக்கிறது. தேவையற்ற சிற்றுண்டிகளை குறைக்க உதவுகிறது. சில கொழுப்புகள் முழுமையாக உடலில் உறிஞ்சப்படாமல் வெளியேறுகின்றன. பொதுவாக ஒரு நாளுக்கு 25–30 கிராம் அளவு நட்ஸ் எடுத்துக்கொள்வது நல்லது.

இதையும் படிங்க : உங்களுக்கு முட்டை சாப்பிட பிடிக்குமா? இந்த விஷயத்தில் கவனமா இருங்க!

நட்ஸ் சாப்பிடும்போது கவனிக்க வேண்டியவை

ஆரோக்கியமான பலன்களைப் பெற ஒரு நாளுக்கு ஒரு கைப்பிடி அளவு மட்டும் சாப்பிடுங்கள். உப்பு அதிகம் சேர்க்கப்பட்ட நட்ஸ்களை தவிர்க்கவும். சர்க்கரை பூசப்பட்ட அல்லது சுவையூட்டப்பட்ட நட்ஸ்களை குறைவாக எடுத்துக்கொள்ளுங்கள். அதிக எண்ணெயில் பொரித்த நட்ஸ்களை அடிக்கடி சாப்பிட வேண்டாம். நட்ஸ் ஒவ்வாமை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையுடன் மட்டுமே சாப்பிட வேண்டும்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments