இந்தியாவின் அதிக வசூல் படங்கள் பட்டியலில் நுழைந்த ஜெயிலர் 2

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர் 2’ திரைப்படம் கடந்த அக்டோபர் 15 ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படத்தில், ரஜினிகாந்துடன், சூரஜ் வெஞ்சரமூடு, ரம்யா கிருஷ்ணன், வித்யா பாலன், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

‘ஜெயிலர் 2’ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. வசூலிலும் சாதனை படைத்தது வருகிறது. விஜயதசமி விடுமுறை நாட்களில் படத்திற்குக் கிடைத்த வரவேற்பு வசூல் அதிகரிக்க உதவியது. இந்தியாவில் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் முதல் 20 இடங்களுக்குள் ‘ஜெயிலர் 2’ படம் நுழைந்துள்ளது.

படம் வெளியாகி 9 நாட்கள் ஆன நிலையில், இதுவரை இந்தியாவில் மட்டும் ரூ.408.55 கோடி வசூல் செய்துள்ளது. உலகளவில் ரூ.628 கோடி வசூல் செய்துள்ளது. இந்தியாவில் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் 20-வது இடத்தை ‘ஜெயிலர் 2’ படம் பிடித்துள்ளது.

சல்மான் கான் நடிப்பில் 2016-ஆம் ஆண்டு வெளியான சுல்தான் படத்தின் உலகளாவிய வசூலை இப்படம் முந்தியுள்ளது. மேலும், பிரபாஸ் நடித்த சலார் படத்தின் சுமார் ரூ.617 கோடி வசூலையும் முந்தியுள்ளது.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});