ஓடிடிக்கு வரும் ஜெயிலர் 2 – கூடுதலாக 30 நிமிட காட்சிகள்? – காத்திருக்கும் சர்ப்ரைஸ்!

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் கடந்த அக்டோபர் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில், ரஜினிகாந்துடன், மோகன்லால், சிவராஜ்குமார், விஜய் சேதுபதி, ஹிருத்திக் ரோஷன், எஸ்.ஜே. சூர்யா, ரம்யா கிருஷ்ணன், வித்யா பாலன், யோகி பாபு, மிதுன் சக்ரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஜெயிலர் 2 மொத்த வசூல்

முதல் பாகத்திற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து உருவான இந்த படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. 2023ஆம் ஆண்டு வெளியான முதல் பாகம் உலகம் முழுவதும் ரூ.605 கோடி வசூல் செய்தது. இதனை தொடர்ந்து ஜெயிலர் 2 உலகம் முழுவதும் ரூ.821 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. இந்தியாவில் மட்டும் ரூ.545 கோடி வசூல் செய்துள்ளது. இதன் மூலம், தமிழின் அதிகம் வசூலித்த திரைப்படம் என்கிற சாதனையைப் பெற்றுள்ளது.

ஜெயிலர் 2 ஓடிடி ரிலீஸ் தேதி

ஜெயிலர் 2 படம் வெளியாகி 20 நாட்கள் ஆன நிலையில், தற்போது ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, ஜெயிலர் 2 திரைப்படம் நவம்பர் 12ஆம் தேதி முதல் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது. ஜெயிலர் 2 படத்தின் ஓடிடி வெளியீட்டில் மார் 30 நிமிடங்கள் கூடுதல் காட்சிகள் சேர்க்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

சந்தானம், மோகன்லால், விஜய் சேதுபதி, ஹிருத்திக் ரோஷன் ஆகியோருடன் தொடர்புடைய சில நீக்கப்பட்ட காட்சிகள் இந்தப் பதிப்பில் இடம்பெற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் கூடுதல் காட்சி குறித்து படக்குழு இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial