கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு மருத்துவமனையில் அனுமதி

சென்னை கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொளத்தூர் தொகுதியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் வி.எஸ்.பாபு. கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் அவர் தொடர்ந்து பங்கேற்று வந்துள்ளார். இந்த காலகட்டத்தில் அவருக்கு மார்பு பகுதியில் சளி பாதிப்பு இருந்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நேற்று இரவு வி.எஸ்.பாபுவுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, அவரை சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வி.எஸ்.பாபுவுக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அவரது உடல்நிலையை மருத்துவர்கள் கண்காணித்து வரும் நிலையில், இன்று அல்லது நாளை அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial