பருப்பு மூட்டையில் இவ்ளோ பெரிய கல்லா? பொதுமக்கள் அதிர்ச்சி

தமிழக அரசு ரேஷன் கடைகளில், கார்டுதாரர்களுக்கு மாதந்தோறும் தலா, ஒரு கிலோ துவரம் பருப்பு, 30 ரூபாய்க்கு மானிய விலையில் வழங்குகிறது. முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு, ரேஷன் கடையில் மக்களுக்கு வழங்கப்படும் துவரம் பருப்பு கொள்முதல் விலையை கிலோவுக்கு ரூ.31 குறைத்து, மூன்று மாதங்களில் ரூ.187 கோடியை மிச்சப்படுத்தியது.

இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உதயமார்த்தாண்டபுரம் நாச்சிகுளம் பகுதியில் உள்ள ரேஷன் ரேஷன் கடையில் மக்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்டு வந்தது. அப்போது பருப்பு மூட்டையில் பெரிய கல் இருப்பதை பார்த்து அங்கிருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அந்த கல்லின் எடை சுமார் 2.5 கிலோ இருந்ததாக கூறப்படுகிறது. இதனை அப்பகுதி மக்கள் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial