மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு: தற்போதைய நிலவரம் என்ன?

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

மதுராந்தகம் தொகுதியில் தவெக வேட்பாளராக மரகதம் குமரவேல் களத்தில் உள்ளார். திமுக சார்பில் பரந்தாமன், அதிமுக சார்பில் கணிதா சம்பத், சிபிஎம் சார்பாக சுகந்தி, நாம் தமிழர் சார்பில் ஜானகிராமன் என மொத்தம் 27 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

தாராபுரம் தொகுதியில் சத்தியபாமா தவெக வேட்பாளராக களம் காண்கிறார். திமுக சார்பில் சுகன்யா, அதிமுக சார்பில் பானுமதி, சிபிஐ கட்சி சார்பாக லட்சுமணன், நாம் தமிழர் கட்சியிலிருந்து கார்த்திகா என 22 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இந்த இரண்டு தொகுதிகளிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில், காலை 9 மணிவரை பதிவான வாக்குகள் சதவீதம் வெளியாகியுள்ளது.

அதன்படி, காலை 9 மணி நிலவரப்படி மதுராந்தகத்தில் 15.99 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. அதேபோல், தாராபுரத்தில் 17.55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் வரும் 9ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial