ஹாலிவுட்டில் ரீமேக் ஆகும் மகாராஜா! – தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதன்முறை!

நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில், அவரது 50-வது திரைப்படமாக கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளியான திரைப்படம் ‘மகாராஜா’. ‘குரங்கு பொம்மை’ படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன் இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

இப்படத்தில், விஜய் சேதுபதியுடன், அனுராக் காஷ்யப், சிங்கம்புலி, மம்தா மோகன்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சுமார் ரூ.20 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் ரூ.110 கோடி வரை வசூல் செய்து மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இந்தப் படம் சீன மொழியில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. அங்குள்ள ரசிகர்களையும் கவர்ந்த மகாராஜா, 2018-ம் வருடத்துக்குப் பிறகு அதிக வசூலை ஈட்டிய இந்தியப் படமாக மாறியது. சீனாவில் மட்டும் இப்படம் சுமார் ரூ.91.65 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.

இந்நிலையில், ‘மகாராஜா’ திரைப்படம் ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமா வரலாற்றிலேயே ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்படும் முதல் தமிழ் படம் என்ற பெருமை ‘மகாராஜா’ படத்திற்கு கிடைத்துள்ளது.

விஜய் சேதுபதி நடித்த முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க வைப்பதற்காக, ஆஸ்கர் விருதை வென்ற பிரபல ஹாலிவுட் நடிகர் மேத்யூ மெக்கனாகே என்பவரிடம் திட்டமிட்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தின் ரீமேக் பணிகள் 2027ம் ஆண்டு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial