மேற்குவங்கத்தில் ஏற்கனவே நடைபெற்ற சட்டசபைத் தேர்தலை மீண்டும் நடத்த வேண்டும் என்றும், பழைய வாக்காளர் பட்டியலை பயன்படுத்தி தேர்தலை நடத்த வேண்டும் என்றும் திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார்.
SIR நடவடிக்கையில் இரு தேர்தல் ஆணையர்களும் கடந்த 10 மாதங்களில் SIR உள்ளிட்ட வாக்காளர் பட்டியல் தொடர்பான முடிவுகள் குறித்து குறைந்தது 14 முறை எழுத்துப்பூர்வமாக ஆட்சேபனை தெரிவித்ததாக தகவல் வெளிவந்துள்ளது.
புதிய வாக்காளர்களை சேர்ப்பது, வாக்காளர் பெயர்களை நீக்குவது, வாக்காளர் தரவுகளை நிர்வகிக்கும் மென்பொருள் தொடர்பான கட்டுப்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் இடம்பெற்றதாக தெரிய வந்துள்ளது.
இந்த செய்தியைத் தொடர்ந்து மம்தா பானர்ஜி தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார். மேற்குவங்கத்தில் பழைய வாக்காளர் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு மீண்டும் சட்டசபைத் தேர்தல் நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். மேலும், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை கைது செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு தொடர்பான விவாதம் மேற்குவங்க அரசியலில் மட்டுமின்றி, தேசிய அளவிலும் தீவிரமடைந்துள்ளது.
மம்தா பானர்ஜியின் கோரிக்கையைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பல்வேறு தலைவர்களும் தலைமை தேர்தல் ஆணையர் மீது கேள்விகளை எழுப்பியுள்ளனர். SIR நடைமுறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

