நடிகர் சூரிக்கு கிடைத்த மற்றொரு வெற்றி.. மண்டாடி 5 நாள் வசூல் நிலவரம்

மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் செப்டம்பர் 10ம் தேதி வெளியானது. இப்படத்தில் சூரியுடன் சத்யராஜ், மஹிமா நம்பியார், சுஹாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படகு போட்டியை மையமாகக் கொண்ட கதைக்களம், சூரியின் கதாபாத்திரம் மற்றும் விறுவிறுப்பான காட்சிகள் ஆகியவை படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளது.

மண்டாடி திரைப்படம் வெளியாகி 5 நாட்கள் ஆன நிலையில் அதன் வசூல் குறித்த தகவல் வெளியாய் உள்ளது. அதன்படி, இப்படம், இந்திய அளவில் ரூ.45.85 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட விடுமுறை நாட்கள் படத்தின் வசூலுக்கு சாதகமாக அமைந்துள்ளன. இதனால் அடுத்தடுத்த நாட்களிலும் திரையரங்குகளில் கூட்டம் தொடர்ந்தால் மண்டாடியின் வசூல் மேலும் உயர வாய்ப்புள்ளது. தற்போதைய வேகத்தை வைத்து பார்க்கும்போது, படம் விரைவில் ரூ.100 கோடி உலகளாவிய வசூல் என்ற மைல்கல்லை நோக்கி நகருமா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

ஆரம்ப காலத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த நடிகர் சூரி, பின்னர் நகைச்சுவை நடிகராக வலம் வந்தார். தற்போது கதாநாயகனாக மாறி தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த ‘விடுதலை’ படத்தை தொடர்ந்து ‘மண்டாடி’ திரைப்படமும் அவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்துள்ளது.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial