குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள வீர் நர்மத் தெற்கு குஜராத் பல்கலைக்கழகம், தனது மாணவர் விடுதிகளில் சிறப்பு பாதுகாப்பு வசதி கொண்ட மின்விசிறிகளைப் பொருத்தியுள்ளது. மாணவர்கள் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ளும் நிகழ்வை தடுக்க இந்த புது முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த மின்விசிறிகளில் என்ன சிறப்பு?
இந்த மின்விசிறியின் இணைப்பில் ஸ்பிரிங் போன்ற பகுதி உள்ளது. இதனால் மின்விசிறியில் 10 கிலோவுக்கு அதிகமான சுமை ஏற்படும்போது, மின்விசிறி தானாக கீழே இறங்கிவிடும். இதன் மூலம், மின்விசிறியைத் தவறான முறையில் பயன்படுத்தும் அபாயத்தைக் குறைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மின்விசிறி ஒன்றின் விலை சுமார் ரூ.1,500 எனச் செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுமட்டும் போதுமா?
மாணவர்களின் மனம் சார்ந்த பிரச்சனைகளைக் கவனிக்காமல் பாதுகாப்பு உபகரணங்களை மட்டும் மாற்றினால் போதுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மாணவர்களின் நடத்தையில் ஏற்படும் மாற்றங்களைக் கவனித்து அவர்களுக்கு ஆலோசனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

