நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா கைது..! என்ன காரணம்?

தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட கார்த்திகாவை போலீசார் கைது செய்துள்ளனர்.

தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்டவர் கார்த்திகா. இவர் அக்கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார்.

தாராபுரம் இடைத்தேர்தலின்போது, வீராச்சிமங்கலம் பிரிவு பகுதியில் நாம் தமிழர் கட்சியினர் பிரசாரம் மேற்கொள்ள முயன்றுள்ளனர். முதலமைச்சர் விஜய் அந்தப் பகுதியில் சாலை வழிப் பயணம் மேற்கொள்ள இருந்ததால், அனுமதி வழங்க முடியாது என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கார்த்திகா மற்றும் நாம் தமிழர் கட்சியினர் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, கார்த்திகா மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கின் அடிப்படையில், கோவையில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்ற தாராபுரம் காவல்துறையினர் கார்த்திகாவையும் அவரது கணவரையும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் விசாரணைக்காகத் தாராபுரம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் நாம் தமிழர் கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial