ஒரே நேரத்தில் 3 சூப்பர் ஸ்டார்களின் படத்தில் நடிக்கும் நயன்தாரா

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘தர்மன்’ திரைப்படத்தில் நடிகை நயன்தாரா இணைந்துள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே ‘சந்திரமுகி’, ‘குசேலன்’, ‘தர்பார்’, ‘அண்ணாத்த’ படங்களில் ரஜினிகாந்துடன் நடித்திருந்த நிலையில் தற்போது மீண்டும் 5 வது முறையாக இணைந்துள்ளார்.

ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்மன்’ திரைப்படத்தை அஷ்வத் மாரிமுத்து இயக்குகிறார். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ‘தர்மன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இப்படம் 2027ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்தில் சிம்ரன், ராஷி கண்ணா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படத்தை வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளதாகச் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

இதற்கிடையே ரஜினிகாந்தும் நயன்தாராவும் 5 வது முறையாக மீண்டும் இணைவதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. நயன்தாரா ஒரே நேரத்தில் 3 சூப்பர் ஸ்டார்களின் படத்தில் நடித்து வருகிறார். தமிழில் ரஜினிகாந்த் உடன் ‘தர்மன்’ படப்பிடிப்பில் இணைந்துள்ள அதே வேளையில் இந்தியில் சல்மான் கான் நடிக்கும் மான்ஸ்டர்’ படத்திலும் மம்மூட்டியின் ‘பாதயாத்திரை’ படத்திலும் நயன்தாரா நடித்து வருகிறார்.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});