ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்ற வீரர் நீரஜ் யாதவ் (42) தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த நீரஜ் யாதவ், இந்தியாவின் மிகச் சிறந்த பாரா தடகள வீரர்களில் ஒருவராக இருந்து வந்தார். இவர், ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். 2018-ல் ஜகார்த்தாவில் நடைபெற்ற போட்டியில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் யாதவ், 2023-ல் ஹாங்சூவில் நடைபெற்ற போட்டிகளில் ஈட்டி எறிதல் மற்றும் வட்டு எறிதலில் தங்கப் பதக்கங்களை வென்றார்.
கடந்த 2023ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளுக்குப் பிறகு, ஊக்கமருந்து சோதனையில் தோல்வி அடைந்தார். இதனால், பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்க முடியாமல் போனது.
இந்த சூழலில், நீரஜ் யாதவ், தனது இல்லத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார். இந்தத் தகவலை இந்திய பாரா தடகள அணியின் தலைமைப் பயிற்சியாளர் எஸ். சத்யநாராயணா அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

