உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்ட புதிய அரசு பேருந்துகள் : என்ன நடந்தது?

சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 26 புதிய நகரப் பேருந்துகளின் சேவை நேற்று (செப்டம்பர் 24) தொடங்கப்பட்டது. இதனை போக்குவரத்துத் துறை அமைச்சர் பார்த்திபன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பேருந்துகளில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி நிறங்களை பயன்படுத்தியது பேசுபொருளாகியுள்ளது. இந்நிலையில், சேலத்தில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற 10-க்கும் மேற்பட்ட புதிய மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் நிறுத்தப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

இந்த பேருந்துகள் முறையான பதிவெண் இல்லாமல் இயக்கப்பட்டுள்ளது என்றும், அந்த பேருந்துகளுக்கு சுங்கச்சாவடியை கடப்பதற்கான ஃபாஸ்டேக் வசதியும் இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது. இதனால், இந்த பேருந்துகள் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடிக்கு வந்தபோது தடுத்து நிறுத்தப்பட்டது.

பேருந்துகள் சுமார் 10 நிமிடங்கள் வரை சுங்கச்சாவடியில் பேருந்துகள் நின்றுள்ளது. இதையடுத்து சுங்கச்சாவடி அதிகாரிகளும் போக்குவரத்துக் கழக அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து, புதிய பேருந்துகள் சுங்கக் கட்டணம் செலுத்தாமல் கடந்து செல்ல அனுமதிக்கப்பட்டன.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial