கடன் சுமையில் சிக்குகிறதா? AI துறைக்கு வந்த புதிய சிக்கல்..!

AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சி உலகம் முழுவதும் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கி வருகிறது. இதற்காக தரவு மையங்கள், கணினி வசதிகள் மற்றும் AI கட்டமைப்புகளை உருவாக்க முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை செய்து வருகின்றன.

தற்போது வந்துள்ள புதிய சிக்கல் என்னவென்றால், AI வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்படும் செலவுகள் நிறுவனங்களின் சொந்த பணப்புழக்கத்தை தாண்டிச் செல்லத் தொடங்கியுள்ளன. மைக்ரோசாப்ட், ஆல்பபெட், அமேசான் மற்றும் மெட்டா ஆகிய நான்கு மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் 2025-ல் இந்த நிறுவனங்களின் மூலதனச் செலவு சுமார் 410 பில்லியன் டாலராக இருந்த நிலையில், 2026-ல் மட்டும் சுமார் 720 முதல் 760 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. ஒரே ஆண்டில் இது சுமார் 77% அதிகரித்துள்ளது.

ஆரம்ப காலத்தில், பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது சொந்த பணத்தை பயன்படுத்தி முதலீடு செய்து வந்தன. ஆனால் தற்போது முதலீட்டின் அளவு மிகப்பெரியதாகிவிட்டதால், அந்த பணம், போதுமானதாக இல்லை என்ற சூழல் உருவாகியுள்ளது.

AI துறையில் வருவாய் வேகமாக அதிகரித்து வருகிறது. ஆனால், அதே நேரத்தில் கட்டமைப்புக்காக செலவிடப்படும் பணத்தின் அளவும் வேகமாக உயர்ந்து வருகிறது. AI துறையின் மிகப்பெரிய முதலீடுகள் ஒருபுறம் நடைபெறும் நிலையில், கடன் செலவு அதிகரிப்பது மறுபுறம் அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial