வரும் ஞாயிற்றுக்கிழமை (செப்.27) அனைத்து வங்கிகளும் இயங்கும் : நிதி அமைச்சகம் அறிவிப்பு

செப்டம்பர் 28 முதல் 30-ம் தேதி வரை நாடு முழுவதும் மூன்று நாள் வங்கி வேலைநிறுத்தம் நடைபெற உள்ள நிலையில், வரும் செப்டம்பர் 27 ஞாயிற்றுக்கிழமையில் பொதுத்துறை வங்கிகள் மற்றும் பிராந்திய கிராமப்புற வங்கிகள் செயல்படும் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குடிமக்களின் வங்கித் தேவைகளைப் பாதுகாப்பதற்காக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்றும், அனைத்துப் பொதுத்துறை வங்கிகள் மற்றும் மண்டல கிராம வங்கிகள் 2026 செப்டம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை அன்று வழக்கம் போல் செயல்படும் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது

செப்டம்பர் 26 சனிக்கிழமை மற்றும் செப்டம்பர் 27 ஞாயிற்றுக்கிழமை ஆகியவை வழக்கமான வார இறுதி விடுமுறை நாட்களாக உள்ளன. இதைத் தொடர்ந்து செப்டம்பர் 28 முதல் 30 வரை வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது. இதனால் தொடர்ச்சியாக வங்கி சேவைகள் பாதிக்கப்படும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக வேலைநிறுத்தத்தைக் கைவிட்டு, பேச்சுவார்த்தைகள் மூலம் தங்களின் நிலுவையில் உள்ள கோரிக்கைகளைத் தீர்த்துக்கொள்ளுமாறு வங்கி ஊழியர்களுக்கு நிதி அமைச்சகம் முன்னதாக வேண்டுகோள் விடுத்திருந்தது.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial