தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள், குருநானக் ஜெயந்தி மற்றும் வார இறுதி நாட்கள் காரணமாக நவம்பர் மாதத்தில் பல்வேறு தேதிகளில் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் மாதத்தில் ஞாயிற்றுக்கிழமைகளான 1, 8, 15, 22, 29 ஆகிய தேதிகளும், இரண்டாவது சனிக்கிழமையான 14ஆம் தேதியும், நான்காவது சனிக்கிழமையான 28ஆம் தேதியும் வருகின்றன. இதன்படி, நவம்பர் மாதத்தில் மொத்தம் 7 நாட்கள் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
நவம்பர் மாத வங்கி விடுமுறை நாட்கள்
நவம்பர் 1, 8, 15, 22, 29 – ஞாயிற்றுக்கிழமை: நாடு முழுவதும் வங்கிகளுக்கு வார விடுமுறை.
நவம்பர் 9 – திங்கள்: தீபாவளி தொடர்பான விடுமுறை மற்றும் லட்சுமி பூஜை, கோவர்தன பூஜை உள்ளிட்ட பண்டிகைகளுக்காக அகர்தலா, போபால், சண்டிகர், கேங்டாக், இம்பால், ஜெய்ப்பூர், கான்பூர், லக்னோ உள்ளிட்ட நகரங்களில் வங்கிகள் மூடப்படலாம்.
நவம்பர் 10 – செவ்வாய்: விக்ரம் சம்வத் புத்தாண்டு மற்றும் பலி பிரதிபதா காரணமாக அகமதாபாத், பெங்களூரு, டேராடூன், மும்பை, நாக்பூர் உள்ளிட்ட நகரங்களில் வங்கிகளுக்கு விடுமுறை.
நவம்பர் 11 – புதன்: பாய் தூஜ் மற்றும் சித்ரகுப்த ஜெயந்தி உள்ளிட்ட காரணங்களால் கேங்டாக், இம்பால், கான்பூர், கொல்கத்தா, லக்னோ, சிம்லா உள்ளிட்ட இடங்களில் வங்கிகளுக்கு விடுமுறை.
நவம்பர் 13 – வெள்ளி: மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் வங்காலா திருவிழாவை முன்னிட்டு வங்கிகளுக்கு விடுமுறை.
நவம்பர் 14 – சனிக்கிழமை: இரண்டாவது சனிக்கிழமை என்பதால் நாடு முழுவதும் வங்கிகளுக்கு விடுமுறை.
நவம்பர் 16 – திங்கள்: பீகார் மாநிலம் பாட்னா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் சாத் பூஜையை முன்னிட்டு விடுமுறை.
நவம்பர் 20 – வெள்ளி: உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் இகாஸ் பக்வால் பண்டிகைக்காக விடுமுறை.
நவம்பர் 23 – திங்கள்: ஷில்லாங்கில் செங்குட்ஸ்னெம் பண்டிகையை முன்னிட்டு வங்கிகளுக்கு விடுமுறை.
நவம்பர் 24 – செவ்வாய்: குருநானக் ஜெயந்தி மற்றும் கார்த்திகை பௌர்ணமியை முன்னிட்டு பல நகரங்களில் வங்கிகளுக்கு விடுமுறை.
நவம்பர் 27 – வெள்ளி: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கனகதாச ஜெயந்தியை முன்னிட்டு விடுமுறை.
நவம்பர் 28 – சனிக்கிழமை: நான்காவது சனிக்கிழமை என்பதால் நாடு முழுவதும் வங்கிகளுக்கு விடுமுறை.
இதையும் படிங்க : ட்ரூகாலர் இனி தேவையில்லை? நவம்பர் 1 முதல் செல்போனில் வரப்போகும் புதிய வசதி!

