இனி பிளிப்கார்ட்டிலும் உணவு ஆர்டர் செய்யலாம்? அக்டோபர் இறுதியில் புதிய சேவை

இந்தியாவின் முன்னணி ஆன்லைன் ஷாப்பிங் (E-commerce) இணையதளங்களில் ஒன்றாக பிளிப்கார்ட் செயல்பட்டு வருகிறது. மொபைல், ஆடைகள், எலக்ட்ரானிக்ஸ் வீட்டு உபயோகப் பொருட்கள் என பல்வேறு பொருட்களை இதில் ஆர்டர் செய்யலாம்.

பிளிப்கார்ட் நிறுவனம் இதுவரை இணையவழி பொருள் விற்பனை செய்து வந்த நிலையில் தற்போது, உணவு விநியோகச் சந்தையிலும் தனது தடத்தைப் பதிக்கத் திட்டமிட்டுள்ளது. ‘ஈட்-இன் பை மினிட்ஸ்’ என்ற பெயரில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தச் சேவைக்கான சோதனை பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. அக்டோபர் மாத இறுதிக்குள் சேவை தொடங்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. பிளிப்கார்ட் தனது புதிய உணவு விநியோகச் சேவையை முதலில் நிறுவன ஊழியர்களுக்கு மட்டுமே வழங்கி சோதித்து வருகிறது.

ஆரம்பத்தில் சில நூறு ஊழியர்களுடன் தொடங்கிய இந்தச் சோதனை, தற்போது சுமார் 8,000 ஊழியர்கள் பயன்படுத்தும் அளவுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. பிளிப்கார்ட் நேரடியாக ஒப்பந்தம் செய்துகொள்ளும் உணவகங்களும் இந்தச் சேவையில் இடம்பெற வாய்ப்புள்ளதாகத் தகவல் தெரிவிக்கிறது.

இந்தியாவின் ஆன்லைன் உணவு டெலிவரி சந்தையில் தற்போது ஸ்விக்கி மற்றும் ஜொமாட்டோ நிறுவனங்கள் முன்னிலை வகித்து வருகின்றன. இந்த நிலையில், பிளிப்கார்ட்டின் வருகையால் போட்டி மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial