மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: களமிறங்கும் நா.த.க.! வேட்பாளர்கள் யார்?

தமிழகத்தில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியும் தேர்தல் களத்தில் இறங்குகிறது.

தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளில் மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 9-ம் தேதி தொடங்குகிறது. அக்டோபர் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அக்டோபர் 9-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

அ.தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார் (பெருந்துறை), சத்யபாமா (தாராபுரம்), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்), சி. விஜயபாஸ்கர் (விராலிமலை), எம்.ஆர். விஜயபாஸ்கர் (கரூர்) ஆகிய 6 பேர் தங்கள் எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.

இதனுடன், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இதனால் மொத்தம் 7 தொகுதிகள் காலியாகின.

திருச்சி கிழக்கு, புதுக்கோட்டை, கரூர், பெருந்துறை, விராலிமலை ஆகிய 5 தொகுதிகளின் தேர்தல் முடிவுகளை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிட முடிவு செய்துள்ளது. இரு தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் கட்சி தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவிக்கும் கட்சி நிர்வாகிகளிடம் விருப்ப மனுக்களும் பெறப்பட்டு வருகின்றன.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial