தனுஷ், மம்மூட்டி, சாய் பல்லவி நடிப்பில் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள ‘ஓம் – ஆபரேஷன் மோல்’ திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.
மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் முதல் நாளிலேயே நல்ல வசூலை பெற்றுள்ளது. குறிப்பாக தனுஷின் முந்தைய படங்களின் முதல் நாள் வசூலைக் கடந்து புதிய சாதனையைப் படைத்துள்ளது.
உலகம் முழுவதும் ஓம் திரைப்படம் முதல் நாளில் 31 கோடியே 55 லட்சம் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்திய அளவில் இந்த திரைப்படம் ஒட்டுமொத்தமாக 20 கோடியே 55 லட்சம் வசூலித்துள்ளதாம். தமிழ்நாட்டில் மட்டுமே 4 ஆயிரத்து 23 காட்சிகள் மூலம் 13 கோடியே 35 லட்சம் ரூபாய் முதல் நாளிலேயே வசூலித்துள்ளது.
‘ஜெயிலர் 2’ மற்றும் ‘ஜனநாயகன்’ படங்களின் முதல் நாள் வசூலை விட ‘ஓம்’ படத்தின் வசூல் பின்தங்கியுள்ளது. அதே நேரத்தில், தனுஷின் முந்தைய படங்களான ‘ராயன்’ முதல் நாளில் ரூ.13.65 கோடியும், ‘குபேரா’ ரூ.14.75 கோடியும், ‘கர’ ரூ.6.20 கோடியும் வசூலித்திருந்தன. முன்னதாக தனுஷ் நடிப்பில் வெளியான தேரே இஷ்க் மெய்ன் திரைப்படம் முதல் நாளில் சுமார் 16 கோடி ரூபாய் இந்தியாவில் வசூலித்து இருந்ததே அவரது மிகப்பெரிய சாதனையாக இருந்தது. அதனை ஓம் திரைப்படம் முறியடித்துள்ளது.
இது இப்படத்திற்கு கிடைத்துள்ள நல்ல ஓப்பனிங் ஆகும். வார இறுதி நாட்கள் என்பதால் வசூல் மேலும் அதிகரிக்கலாம். இருப்பினும் இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

