பிரபல பாலிவுட் நடிகரின் பங்களாவை இடித்த மும்பை மாநகராட்சி…என்ன காரணம்?

மும்பை ஜூஹு பகுதியில் பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனுக்குச் சொந்தமான பங்களாவின் ஒரு பகுதியை, மும்பை மாநகராட்சி இடித்துள்ளது. சுமார் 7,802 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த வீட்டில், மாநகராட்சியின் அனுமதி பெறாமல் சில மாற்றங்கள் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அஜய் தேவ்கனுக்கு பங்களாவுக்குள் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தப் பணிகளுக்கு உரிய மாநகராட்சி அனுமதிகள் பெறப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, கட்டுமான நடவடிக்கைகள் தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் தலையிட்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில், கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி மும்பை மாநகராட்சி சட்டத்தின் 354ஏ பிரிவின் கீழ் அஜய் தேவ்கனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில் , அனுமதியற்ற கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்தவும், மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்கான உரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

அந்த உத்தரவுக்குப் பிறகும் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுள்ளது. இதையடுத்து பங்களாவின் சில பகுதிகளை இடிக்கும் பணியில் மும்பை மாநகராட்சி ஈடுபட்டது.

சட்டம் 354ஏ என்றால் என்ன?

இந்த சட்டத்தின்படி கட்டுமானப் பணிகள் விதிமுறைகளுக்கு முரணாக நடைபெறுவதாகக் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பணிகளை நிறுத்துமாறு அறிவுறுத்தலாம். கட்டிடங்களில் அனுமதியற்ற கட்டுமானங்கள் அல்லது விதிமீறல்கள் தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முடியும்.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial