HomeTamilnaduஓடும் காரில் தொங்கியபடி திருமாவளவனுடன் பேசிய கட்சி நிர்வாகி - வைரலாகும் வீடியோ

ஓடும் காரில் தொங்கியபடி திருமாவளவனுடன் பேசிய கட்சி நிர்வாகி – வைரலாகும் வீடியோ

கடலூர் மாவட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனிடம் பேசிக்கொண்டிருந்த கட்சி நிர்வாகி ஒருவர், கார் நகர்ந்ததை கவனிக்காமல் ஜன்னலைப் பிடித்தபடி சில தூரம் தொங்கியவாறு சென்ற சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

சமீபத்தில் திருமாவளவன், கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது கடலூரைச் சேர்ந்த வி.சி.க. நிர்வாகி ஒருவர், திருமாவளவனிடம் கட்சி தொடர்பான விஷயங்களை பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கார் ஓட்டுநர் வாகனத்தை இயக்கியதால், அந்த நிர்வாகி சில தூரம் காரில் தொங்கியபடியே பயணித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

கார் சுமார் 100 மீட்டர் தூரம் சென்ற பிறகு, நிர்வாகி தொங்கியபடி வருவதை கவனித்த திருமாவளவன், உடனடியாக ஓட்டுநரிடம் காரை நிறுத்துமாறு கூறியதாக தகவல் தெரிவிக்கிறது. அதன்பிறகு, சாலையோரத்தில் வாகனம் நிறுத்தப்பட்டு, அந்த நிர்வாகி பாதுகாப்பாக இறக்கிவிடப்பட்டார். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments