ஏ.ஐ உதவியுடன் 300 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்துபோன பறவையை மீண்டும் உருவாக்கத் திட்டம்

ஏ.ஐ உதவியுடன் 300 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்துபோன டோடோ பறவையை மீண்டும் உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர். அமெரிக்காவைச் சேர்ந்த கொலோசல் பயோசயின்சஸ் நிறுவனம், ஏ.ஐ உதவியுடன் டோடோ பறவையின் மரபணு ஆய்வில் சுமார் 95 சதவீதப் பணிகளை நிறைவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இந்திய பெருங்கடலில் அமைந்துள்ளது மொரிஷியஸ், மடகாஸ்கர் தீவுகள். இந்தத் தீவுகளில் இந்த டோடோ பறவை இனம் அதிகம் காணப்பட்டது. இந்த பறவையால் பறக்கவோ, வேகமாக நடக்கவோ முடியாது. மனிதர்களின் வேட்டையாடுதல், வாழிட மாற்றங்கள் காரணமாக இந்தப் பறவை இனம் அழிந்துபோனது.

தற்போது, அழிந்துபோன உயிரினங்களின் மரபணு மாற்றங்கள் மூலம் மீண்டும் உருவாக்க முடியுமா என்பதை விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர். இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, டோடோ பறவையின் மரபணுக்களை ஆராய்ந்து, அதன் மரபணு மாற்றங்களைக் கண்டறிய கொலோசல் நிறுவனம் பணியாற்றி வருகிறது. அதன் ஆய்வுப் பணிகள் சுமார் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த ஆய்வில் ‘ஜீனோமார்ப்’ (GenoMorph) என்ற செயற்கை நுண்ணறிவுத் தளம் பயன்படுத்தப்படுகிறது. பறவைகளின் உடல் அமைப்பு, மரபணு வேறுபாடுகள் மற்றும் வளர்ச்சிப் பண்புகள் தொடர்பான தகவல்களை ஒப்பிட்டு ஆராய இந்தத் தொழில்நுட்பம் உதவுகிறது. டோடோ பறவையின் பெரிய அலகு மற்றும் முக அமைப்புக்குக் காரணமாக இருக்கக்கூடிய மரபணுப் பகுதிகளை அடையாளம் காண்பதில் இந்தத் தொழில்நுட்பம் உதவியுள்ளதாக நிறுவனம் கூறியுள்ளது.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial