பாப்கார்ன் ரூ.600, 1 லிட்டர் தண்ணீர் ரூ.90.. கேரள திரையரங்குகளில் கட்டணக் கொள்ளை?

சமீப காலமாக திரையரங்குகளில் விற்கப்படும் உணவுப் பொருட்களின் விலை அதிகமாக இருப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில், கேரளாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் திரையரங்குகளில் விற்கப்படும் உணவு மற்றும் பானங்களின் விலை தொடர்பான அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

கேரளாவின் சில திரையரங்குகள் மற்றும் மல்டிபிளக்ஸ் அரங்குகளில் பாப்கார்ன் விலை ரூ.295 முதல் ரூ.600 வரை இருப்பதாக தெரியவந்துள்ளது. ஒரு லிட்டர் பாட்டிலுக்கு ரூ.90 வரையிலும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கிறது. குளிர்பானங்களும் வழக்கமான விலையைவிட பல மடங்கு அதிகமாக விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

கேரளாவுடன் ஒப்பிடும்போது தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் உள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் சில உணவுப் பொருட்களின் விலை குறைவாக இருப்பதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாநிலங்களில் 90 கிராம் சாதாரண பாப்கார்ன் சுமார் ரூ.149-க்கும், 130 கிராம் பெரிய அளவிலான பாப்கார்ன் சுமார் ரூ.179-க்கும் விற்பனை செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது. அதேபோல், சர்க்கரைப் பாகு சேர்க்கப்பட்ட பாப்கார்னுக்கு பொதுவாக ரூ.249 முதல் ரூ.299 வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

திரைப்படத்திற்கான டிக்கெட்டை வாங்கிய பிறகு இடைவேளையில் குழந்தைகளுக்கு பாப்கார்ன் அல்லது வேறு தின்பண்டங்களை வாங்கிக் கொடுக்கும்போது, அதற்காக தனியாக அதிக தொகையை செலவிட வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் குடும்பத்துடன் திரையரங்குகளுக்கு வரும் பலர், குழந்தைகளுக்கு தேவையான நொறுக்குத்தீனிகளை வாங்கித் தருவதில் சிரமத்தை சந்திப்பதாக கூறப்படுகிறது.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial