இதனாலதான் குக்கர் வெடிக்குது., இனி இந்த தவறை மட்டும் செய்யாதீங்க!

இந்திய சமையலறைகளில் பிரஷர் குக்கர் தவிர்க்க முடியாத பொருளாக உள்ளது. சமையல் மிக வேகமாக முடிவதால் பல்வேறு வீடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்படி தினமும் பயன்படுத்தப்படும் குக்கரை சமைத்த பிறகு சுத்தம் செய்வது அவசியம்.

குக்கரை கழுவும் போது மூடியை மட்டும் கழுவினால் போதாது. குறிப்பாக மூடிக்குள் பொருத்தப்பட்டிருக்கும் ரப்பர் காஸ்கெட் வளையத்தை கழற்றி சுத்தம் செய்ய வேண்டும். குக்கரில் பயன்படுத்தப்படும் நீராவி, எண்ணெய் மற்றும் உணவுப் பொருட்களின் சிறிய துகள்கள் காஸ்கெட் உள்ள பகுதிகளில் அப்படியே படிந்துவிடும். எனவே குக்கரின் ஒவ்வொரு பாகத்தையும் முறையாகப் பராமரிப்பது அவசியம்.

குக்கரை பாதுகாப்பாக வைத்துக்கொள்வது எப்படி?

முதலில் குக்கர் மூடியிலிருந்து காஸ்கெட்டை கவனமாக அகற்றி தனியாக கழுவ வேண்டும். காஸ்கெட்டை வெதுவெதுப்பான நீர் போட்டு சுத்தம் செய்வது நல்லது. அதேபோல் காஸ்கெட் பொருத்தப்படும் மூடியின் பள்ளத்தையும் சுத்தமாகத் துடைக்க வேண்டும். சுத்தம் செய்த பிறகு காஸ்கெட்டையும் மூடியையும் முழுமையாக உலர்த்திய பின்னர் மீண்டும் பொருத்த வேண்டும்.

காஸ்கெட்டை மட்டும் சுத்தம் செய்தால் போதாது. குக்கரில் இருந்து விசில் மற்றும் நீராவி செல்லும் குழாய்யையும் சுத்தம் செய்ய வேண்டும். இதை சரியாக சுத்தம் செய்யாவிட்டால் நீராவி வெளியே செல்லமுடியாமல் குக்கர் வெடிக்கும் அபாயம் உள்ளது.

பலர் குக்கரைக் கழுவிய உடனேயே அதன் மூடியை இறுக்கமாகப் பூட்டி அலமாரியில் வைத்துவிடுகிறார்கள். அவ்வாறு செய்வதால், ஈரப்பதம் உள்ளே தங்கி துர்நாற்றம் ஏற்படும். எனவே அது நன்கு காய்ந்த பிறகு மூடி வைக்கவேண்டும்.

குக்கரில் காஸ்கட் தளர்ந்து போய்விட்டால் பிரிஜ்ஜில் ஒருநாள் வைத்திருந்து பிறகு போட்டுப்பார்த்தால் சரியாக இருக்கும். புதிய காஸ்கெட் வாங்கிய உடன் பழைய காஸ்கெட்டை பயன்படுத்தக்கூடாது. விசில், கேஸ் கட், வாஷர் போன்றவை சரியாக உள்ளதா என்பதை கவனித்து அதனை அடிக்கடி மாற்ற வேண்டும்.

ஸ்டீல் ஸ்க்ரப்பர் பயன்படுத்துவதை தவிர்த்திடுங்கள். இதனால் குக்கரின் மேற்பரப்பில் கீறல் விழலாம். மென்மையான பஞ்சு அல்லது நைலான் தேய்ப்புக்கருவியை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial