தேர்தல் ஆணையருக்கு எதிராக போராட்டம் : கலந்து கொள்கிறதா தவெக?

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக கோரி, கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் மும்பையில் போராட்டம் நடைபெற்று வருகிறது. நேற்று, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நேற்று, மும்பை சிவாஜி பூங்காவில் போராட்டம் நடைபெற்றது. டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

மும்பையின் முக்கிய சாலைகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இருப்பினும், போலீஸ் தடையை மீறி ஏராளமான போராட்டக்காரர்கள் அங்கு திரண்டனர். இந்தப் போராட்டத்தில் நடிகர்கள் ஷபானா ஆஸ்மி, நசிருதீன் ஷா, பாடகர் விஷால் தத்லானி உள்ளிட்ட பிரபலங்களும் பங்கேற்றனர்.

மும்பை போராட்டத்தைத் தொடர்ந்து அக்டோபர் 6-ஆம் தேதி டெல்லியில் பெரிய அளவிலான பேரணியை நடத்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி திட்டமிட்டுள்ளது.

போராட்டத்தில் பங்கேற்கும் தவெக

ஞானேஷ் குமாரை கண்டித்து போராட்டம் நடத்துவது தொடர்பாக சென்னையில் இன்று இந்தியா கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இன்று காலை 11 மணியளவில் நடைபெற உள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், முஸ்லிம் லீக், மதிமுக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டத்தில் தவெக பங்கேற்குமா என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial