நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ரஜினிகாந்துடன் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, எஸ்.ஜே. சூர்யா, மிதுன் சக்ரவர்த்தி, வித்யா பாலன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும், மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட பிரபலங்களும் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளனர். ஜெயிலர் 2 திரைப்படம் ரசிகர்களிடையே தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வருகிறது.
படம் வெளியாகி 15 நாட்கள் ஆன நிலையில், இப்படம் உலகம் முழுவதும் ரூ.765.15 கோடி வசூல் செய்துள்ளது. இந்தியாவில் மட்டும் ரூ.502.65 கோடி மொத்த வசூலைப் பெற்றுள்ளது.
15-வது நாளான வியாழக்கிழமை இந்தியாவில் ரூ.5.90 கோடி நிகர வசூல் கிடைத்துள்ளது. இதில் தமிழ் பதிப்பு ரூ.3.20 கோடியும், தெலுங்கு பதிப்பு ரூ.1.40 கோடியும், இந்திப் பதிப்பு ரூ.1.10 கோடியும், கன்னடப் பதிப்பு ரூ.20 லட்சமும் வசூல் செய்துள்ளன.
இதுவரை தமிழ் சினிமாவில் உலக அளவில் அதிக வசூல் செய்த திரைப்படமாக ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 2.0 திரைப்படம் இருந்தது. இப்படம், உலகம் முழுவதும் சுமார் ரூ.691 கோடி வசூல் செய்திருந்தது.
தற்போது ஜெயிலர் 2 திரைப்படம் ரூ.765 கோடியைக் கடந்து அந்தச் சாதனையை முறியடித்துள்ளது. இதன் மூலம் உலக அளவில் அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படம் என்ற புதிய சாதனையைப் படைத்துள்ளது.

