புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவரும் பேராசிரியருமான சாலமன் பாப்பையா (90) இன்று உடல்நலக்குறைவால் காலமானார்.
தமிழ்நாட்டின் மிகவும் பிரபலமான பட்டிமன்ற நடுவர்களில் ஒருவராகவும், தமிழ் பேச்சாளராகவும் அறியப்படுபவர் சாலமன் பாப்பையா. தமிழ் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக பேச்சுத் துறையில் தனது பயணத்தைத் தொடங்கினார். குறிப்பாக பட்டிமன்றம் மூலமாக அவரது பேச்சு மக்கள் மத்தியில் சென்றடைந்தது.
தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது அவருக்கு 2000ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. அண்ணாமலைப் பல்கலைக்கழகம் 2010ஆம் ஆண்டு அவருக்கு முத்தமிழ் பேரறிஞர் விருது வழங்கி சிறப்பித்தது.
இந்திய அரசால் 2021ஆம் ஆண்டு சாலமன் பாப்பையாவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. இலக்கியம் மற்றும் கல்வி–பத்திரிகைத் துறையில் அவரது பங்களிப்புக்காக இந்த விருது வழங்கப்பட்டது.

