“எங்கள் வேலைகளை பறிக்காதீர்கள்!” AI-க்கு எதிராக களமிறங்கிய ரோபோக்கள்

செயற்கை நுண்ணறிவின் வேகமான வளர்ச்சி வேலைவாய்ப்புகளில் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்து உலகம் முழுவதும் விவாதம் நடைபெற்று வரும் நிலையில், போலந்தில் ரோபோக்களே AI கட்டுப்பாட்டை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் நடந்துள்ளது.

போலந்து நாட்டின் டிஜிட்டல் விவகார அமைச்சகத்திற்கு வெளியே கடந்த செப்டம்பர் 7-ந் தேதி இந்த வித்தியாசமான போராட்டம் நடைபெற்றது. செயற்கை நுண்ணறிவுக்கு வலுவான கண்காணிப்பும் கட்டுப்பாடும் தேவை என்பதை வலியுறுத்தும் வகையில் ரோபோக்கள் போராட்டத்தில் இடம்பெற்றன.

பொதுவாக மனிதர்கள் தொழில்நுட்பத்திற்கு எதிராக போராட்டம் நடத்துவது வழக்கம். ஆனால் இந்த நிகழ்வில் தொழில்நுட்பத்தின் ஒரு பகுதியாக இருக்கும் ரோபோக்களே AI-க்கு எதிராக போராட்டம் நடத்தியுள்ளது.

போலந்தில் நடைபெற்ற இந்த போராட்டம், தொழில்நுட்பம் தொடர்பான போராட்டங்களிலேயே வித்தியாசமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. மனிதர்களின் வேலைவாய்ப்பை பாதிக்கக்கூடிய AI தொழில்நுட்பம் குறித்து எச்சரிக்கை ஏற்படுத்தும் நோக்கில் ரோபோக்களையே போராட்டத்தில் முன்னிறுத்தியிருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial