சப்ஜா விதைகளை தினமும் சாப்பிடலாமா? அதிகமா சாப்பிட்டால் என்ன நடக்கும்?

சப்ஜா விதையில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், புரதம், கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துகள் உள்ளன. இதை தண்ணீரில் ஊறும்போது அளவில் பெரிதாகி, விதையைச் சுற்றி வழுவழுப்பான ஜெல் போன்று உருவாகும். இவைகள் கோடை காலத்தில் ரோஸ் மில்க், ஃபலூடா உள்ளிட்ட குளிர்பானங்களில் சேர்க்கப்படுகிறது. சப்ஜா விதைகள், சுவைக்காக மட்டுமின்றி ஊட்டச்சத்துக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன.

சப்ஜா விதை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

சப்ஜா விதைகளில் உள்ள நார்ச்சத்து குடல் இயக்கத்தை சீராக்கி மலசிக்கல் பிரச்சனையை தீர்க்கும். தண்ணீரில் ஊறிய சப்ஜா விதைகள் வயிறு நிறைந்த உணர்வைத் தரக்கூடும். இதனால் அடிக்கடி பசி எடுப்பதை தடுக்கும். இதன் மூலம் தேவையற்ற உணவுகளை சாப்பிடுவதை தடுக்க முடியும்.

சப்ஜா விதைகளில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் உதவும். சப்ஜா விதைகளில் உள்ள கால்சியம், மெக்னீசியம், இரும்பு போன்ற தாதுக்கள் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது.

சப்ஜா விதைகள் இயற்கையாகவே உடல் சூட்டைக் குறைத்து வயிற்றில் அதன் தாக்கத்தைக் குறைக்கும். சப்ஜா விதைகள் மனதை அமைதிப்படுத்தும் மற்றும் மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் குறைக்கும்.

சப்ஜா விதைகளில் உள்ள புரதம் முடி உதிர்வைக் குறைக்கவும், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும், முடியின் அளவை அதிகரிக்கவும் உதவும்.

இதையும் படிங்க : உணவுக்குப் பிறகு அன்னாசிப்பழம் சாப்பிடலாமா? சாப்பிட்டால் என்ன நடக்கும்?

சப்ஜா விதைகளை எப்படிச் சாப்பிட வேண்டும்?

ஒரு சிறிய கரண்டி சப்ஜா விதைகளை எடுத்துக்கொள்ளவும். தேவையான தண்ணீரில் சேர்த்து நன்றாக ஊறவைக்கவும். விதைகள் முழுமையாக ஊறியபிறகு எலுமிச்சைப் பானம், மோர், பால், பழச்சாறு, தயிர் போன்றவற்றில் சேர்த்து சாப்பிடலாம். ஒரே நாளில் அதிக அளவு உட்கொள்வதைத் தவிர்க்கவும்.

சப்ஜா விதை தீமைகள்

சப்ஜா விதைகளை அதிகமாக உட்கொள்வதால் சிலருக்கு குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்று அசௌகரியம், பசியின்மை போன்றவை ஏற்படலாம். சப்ஜா விதைகளில் உள்ள அதிக நார்ச்சத்து இருப்பதால் அதை அதிகம் சாப்பிடும்போது வாயு மற்றும் வயிற்றுப் பிடிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

சப்ஜா விதைகளைத் தண்ணீரில் நன்றாக ஊறவைத்த பின்னர் சாப்பிட வேண்டும். ஒரே நேரத்தில் அதிக அளவு சப்ஜா விதைகளைச் சாப்பிடுவது வயிற்று அசௌகரியத்தை அதிகரிக்கும்.

இதையும் படிங்க : இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீர்கள்… இரும்புச்சத்து குறைபாடாக இருக்கலாம்!

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial