காப்புரிமை விவகாரம்: இளையராஜாவின் சொத்துகளை முடக்க ‘சரிகமா’ நிறுவனம் கோரிக்கை

இசைஞானி இளையராஜாவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி, ‘சரிகம’ நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.

இளையராஜா இசையமைத்த திரைப்படங்களின் பாடல்கள் மற்றும் இசைக்கான பதிப்புரிமை தொடர்பாக சரிகமா நிறுவனத்துக்கும் அவருக்கும் இடையே சட்டப்போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில், சரிகமா நிறுவனம் 134 திரைப்படங்களுடன் தொடர்புடைய ஒலிப்பதிவுகள் மற்றும் அவற்றைச் சார்ந்த உரிமைகள் தங்களுக்கு இருப்பதாகக் கோரியுள்ளது. இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் இளையராஜா அந்தப் படங்களின் இசையை குறிப்பிட்ட வகையில் பயன்படுத்துவது, வணிக ரீதியாக பயன்படுத்த உரிமம் வழங்குவது உள்ளிட்ட செயல்களுக்கு இடைக்காலத் தடையை விதித்திருந்தது.

பின்னர் ஜூலை 1-ம் தேதி வழங்கப்பட்ட உத்தரவிலும் அந்தத் தடையை நீதிமன்றம் தொடர்ந்தது. இதனை எதிர்த்து இளையராஜா தரப்பிலும் மேல்முறையீட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இளையராஜா தாக்கல் செய்த மேல்முறையீட்டை டெல்லி உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு கடந்த மே மாதம் நிராகரித்தது.

இந்த நிலையில், நிலுவையில் உள்ள சட்ட நடவடிக்கையில் இளையராஜாவின் சொத்துகளை முடக்க வேண்டும் எனக் கோரி சரிகமா நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளது. சரிகம நிறுவனத்தின் புகாருக்கு பதிலளிக்குமாறு இளையராஜாவிற்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டு, வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial