தமிழகத்தில் விமானப் போக்குவரத்தை அதிகரிக்கும் நோக்கில், விமான எரிபொருள் மீதான மதிப்புக் கூட்டு வரியை மாநில அரசு அதிரடியாகக் குறைத்துள்ளது. சென்னையில் இந்த வரி 29 சதவீதத்தில் இருந்து 16 சதவீதமாகவும், சென்னையைத் தவிர மற்ற விமான நிலையங்களில் 29 சதவீதத்தில் இருந்து 1 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த வரிக் குறைப்பு 2026 நவம்பர் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இந்தச் சலுகை 2027 அக்டோபர் 31ஆம் தேதி வரை அமலில் இருக்கும். தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கு இடையேயான விமானப் போக்குவரத்தை மேம்படுத்தவும் இந்த நடவடிக்கை உதவும் என கருதப்படுகிறது.
நன்றி சொன்ன விமான நிறுவனங்கள்
விமான எரிபொருள் மீதான மதிப்புக் கூட்டு வரியைக் குறைக்கும் தமிழக அரசின் இந்த முடிவை வரவேற்கிறோம். இந்த முற்போக்க்கான முன்னெடுப்புக்கு முதல்வர் விஜய்க்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என இண்டிகோ விமான நிறுவனம் கூறியுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் வரியை 29 சதவீதத்திலிருந்து 16 சதவீதமாகவும், மாநிலத்தின் பிற விமான நிலையங்களில் 1 சதவீதமாகவும் குறைத்திருப்பது வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும். எங்களின் சேவையை மேலும் வலுப்படுத்தவும், தமிழ்நாட்டு மக்களுக்குச் சிறந்த சேவையை வழங்கவும் இது உதவும் என ஏர் இந்தியா நிறுவனம் கூறியுள்ளது.
இதையும் படிங்க : சவுதி அரேபியாவுக்கான இண்டிகோ விமானங்கள் ரத்து நீட்டிப்பு

