கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று உயிரிழந்தார். சென்னை அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம். ஹெல்த்கேர் மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் 9-ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.
72 நாட்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவருக்கு, நவம்பர் 19ஆம் தேதி பிற்பகல் 2.24 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டதாகவும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. அவரது உடலுக்கு முதலமைச்சர் விஜய் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்தனர்.
இந்த சூழலில், வி.எஸ். பாபுவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி கொளத்தூர் தொகுதியைச் சேர்ந்த ஒருவர் காவல்துறையில் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வி.எஸ். பாபுவின் உடல்நிலை தொடர்பான தகவல்களை சட்டப்படி பொதுமக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி தேவராஜன் ஏற்கெனவே சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியிருந்தார்.
வி.எஸ். பாபுவுக்கு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான விவரங்கள் மற்றும் மருத்துவ ஆவணங்கள் அழிக்கப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் தேவராஜன் கோரிக்கை வைத்துள்ளார்.

