பக்தர்களிடம் கிளம்பிய எதிர்ப்பு., செல்போன் பாதுகாக்க கட்டணம் வசூலிக்கும் முறை ரத்து

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற பல்வேறு கோவில்களில் பக்தர்கள் செல்போன் மூலம் புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பது, செல்பி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. குறிப்பாக கோவில் வளாகத்தில் எடுக்கப்படும் வீடியோக்கள் மற்றும் ரீல்ஸ்கள் சமூக வலைதளங்களில் வெளியிடப்படுவது தொடர்பாகவும் இந்து சமய அறநிலையத்துறைக்கு புகார்கள் சென்றுள்ளன.

இதையடுத்து, தமிழகத்தில் 52 முக்கிய திருக்கோயில்களில் செப்டம்பர் 1 முதல் செல்போன் கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. கோயில்களின் புனிதத்தன்மையையும் அமைதியான வழிபாட்டு சூழலையும் உறுதிப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

கோவில்களில் செல்போன்களில் பாதுகாப்பாக வைப்பதற்காக வசூலிக்கப்பட்ட ரூ.5 கட்டணம் வசூலிக்கப்பட்டது. இது பக்தர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்படுத்தியது. பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் தொழில்நுட்ப பராமரிப்புச் செலவுகளை ஈடுகட்டும் வகையில் ஒரு கைப்பேசிக்கு குறைந்தபட்சமாக ரூ.5 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டதாக அமைச்சர் ரமேஷ் விளக்கம் அளித்தார்.

மேலும், கோவிலுக்குள் கேமரா வசதி கொண்ட செல்போன்களை கொண்டு செல்வதற்கே கட்டுப்பாடு என்றும் கேமரா இல்லாத சாதாரண செல்போன்களுக்கு இந்த கட்டுப்பாடு பொருந்தாது என்றும் அமைச்சர் ரமேஷ் கூறியிருந்தார்.

இந்நிலையில், திருச்சியில் கைப்பேசி பாதுகாப்பு வசதி செய்யப்பட்டிருந்த 5 முக்கிய கோயில்களில் ரூ.5 கட்டணம் வசூலிக்கும் நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில், மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயில், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயில், உறையூர் வெக்காளியம்மன் கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில் ஆகிய கோவில்களில் பக்தர்களின் எதிர்ப்பு காரணமாக கட்டண வசூல் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial