பாலியல் தொழில் கும்பலிடம் மாட்டிக்கொண்ட தொலைக்காட்சி நடிகை மீட்பு

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில், பெண்களைக் கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் 39 வயதுடைய பெண் ஒருவரை போலீசார் கைது செய்தனர். இந்த கும்பலிடம் மாட்டிக்கொண்ட 35 வயது நடிகை ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டத்தில் பெண்கள் கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதாக ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்துக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, அந்த அமைப்பினர் அளித்த ரகசியத் தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கினர்.

அதன்படி, அக்டோபர் 8-ஆம் தேதி மீரா-பயந்தர் சாலையில் அமைந்துள்ள ஒரு விடுதிக்கு சென்று சோதனை நடத்தியுள்ளனர். சோதனையின்போது, பெண்களைப் பாலியல் தொழில் நடத்தி வந்த சோனியா உமர் குரேஷி (39) என்ற பெண்ணை கைது செய்தனர்.

இந்தச் சோதனையின்போது 35 வயதுடைய தொலைக்காட்சி நடிகை ஒருவர் மீட்கப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்தனர். அவர் இந்தி தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் வலைத்தொடர்களில் நடித்து வந்துள்ளார். மீட்கப்பட்ட நடிகை, மும்பையில் உள்ள மீட்பு மையத்தில் பாதுகாப்பாகத் தங்கவைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சோனியா உமர் குரேஷி, சத்தீஸ்கர் மாநிலத்தின் சர்குஜா மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும், தற்போது மும்பையின் ஜோகேஸ்வரி பகுதியில் வசித்து வந்தார் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயிலின் முக்கிய சிறப்புகள் என்னென்ன?

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial