லஞ்சம் பெறுவதற்கு பல நூதன முறைகள் பின்பற்றப்படுகிறது. ஒவ்வொரு பத்திரப் பதிவுக்கும் நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கில் லஞ்சம் பறிக்கும் சார் பதிவாளர் வெங்கடேசன். புரோக்கர்கள் மூலம் பணியை முடித்து தராமல் தாமதப்படுத்தி அதிக பணம் வசூலிப்பதாக புதிய சார் பதிவாளர் வெங்கடேசன் மீது பாதிக்கப்பட்டவர்கள் சரமாரியாக புகார் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
பத்திரத்தில் பென்சில் மார்க்கிங் மூலம் குறிப்பிட்டு ஒரு பெரிய தொகையை லஞ்சப் பணமாக வெங்கடேசன் கேட்பதாக அவர் மீது கடுமையான குற்றச்சாட்டு நுகர்வோர் தரப்பில் கூறப்படுகிறது. தமிழக முதல்வர், பதிவுத்துறை அமைச்சர் மற்றும் பதிவுத்துறை தலைவர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனடியாக விசாரணையை நடத்த வேண்டும் – என்று நுகர்வோர் தரப்பில் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டுள்ளனர்.
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், கிளித்தான்பட்டறை, காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில், வசூல் வேட்டை நடைபெறுவதாகவும், லஞ்சம் பெறுவதற்கு பல நூதன முறைகள் கையாளப்படுவதாகவும் பகீர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஒவ்வொரு பத்திரப் பதிவும் சரியாக இருந்தாலும் கூட, ஒவ்வொரு ரிமார்க்கிற்கும் மார்க் செய்து, அதன் மூலம் நாள் ஒன்றுக்கு பல லட்சங்களை வாரிக் குவிக்கும் பெரிய ஜாம்பவானாக, புதியதாக பொறுப்பேற்றுள்ள சார் பதிவாளர் வெங்கடேசன் செயல்படுவதாக நுகர்வோர் மற்றும் பத்திரப் பதிவு பணியில் ஈடுபடும் தரப்பினரிடையே பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
குறிப்பாக, சில புரோக்கர்களை அருகில் வைத்துக்கொண்டு, பத்திரப் பதிவு பணிகளை வேண்டுமென்றே கால தாமதப்படுத்தி, அதன் மூலம் கூடுதல் பணத்தை தந்திரமாக வசூலிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட நுகர்வோர் மற்றும் பத்திரப் பதிவு பணியாளர்கள் தரப்பில் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
பத்திரப் பதிவு செய்ய வரும் பொதுமக்களிடம், பத்திரத்தின் ஓரப்பகுதியில் பென்சிலால் குறிப்பிட்ட வகையில் மார்க்கிங் செய்து, எல்லாம் சரியாக இருந்தாலும் கூட, லஞ்சம் பெறுவதற்காக ஒரு ஓட்டையை கண்டுபிடித்து, அதன் அடிப்படையில் லஞ்சம் பெறுவதற்கு புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி, பென்சிலில் ரீமார்க் செய்கிறார் எனவும், அதனை புரோக்கர்கள் மூலம் பணம் வசூலிப்பதற்கான அடையாளமாக பயன்படுத்தப்படுவதாகவும் பகீர் குற்றச்சாட்டு கூறப்படுகிறது.
இந்த நடைமுறையின் ஒரு பகுதியாகத்தான் அந்த மார்க்கிங் செய்யப்படுகிறதா..? என்பது குறித்து பதிவுத்துறை உயர் அலுவலர்கள் நேரடியாக விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொணர வேண்டும் என நுகர்வோர் எதிர்பார்க்கின்றனர்.
பத்திரப் பதிவு செய்யவும், பதிவு செய்யப்பட்ட ஆவணங்களைப் பெறவும் அலுவலகத்திற்கு வரும் நுகர்வோர் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அசாதாரண நிலை நிலவுவதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக, உரிய ஆவணங்கள் மற்றும் அரசு நிர்ணயித்த கட்டணங்களுடன் வரும் பொதுமக்களுக்கு பணிகள் தாமதமாகி, கூடுதல் தொகையாக ‘ப’ வைட்டமின் வழங்கினால் மட்டுமே வேலை விரைவாக நடைபெறுவதாக கூறப்படும் குற்றச்சாட்டு மிகவும் கொடூரமானதாக பார்க்கப்படுகிறது.
தற்போது தமிழகத்தில் நிலவி வரும் சூழலில், அதிக லஞ்சம் பெற்றால் மேலிடத்தில் செல்வாக்கு கிடைக்கும் என்றும், பதவி உயர்வு கிடைக்கும் என்றும் கூறப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
“அடுத்த பதவி உயர்வுக்கு (மாவட்ட பதிவாளர்) வசூல் காரணமா?” – விசாரிக்க கோரிக்கை
மேலும், அதிகளவில் பணம் வசூலிப்பதன் மூலம் தனக்கு அடுத்த கட்டமாக மாவட்ட பதிவாளர் பதவி உயர்வு கிடைக்கும் என சார் பதிவாளர் தரப்பில் கூறப்படுவதாகவும் சிலர் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து துறை ரீதியாக விசாரணை நடத்தப்பட வேண்டும். அரசு பணியில் இருப்பவர் மீது இத்தகைய குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், புகார்களை புறக்கணிக்காமல், சம்பந்தப்பட்ட பதிவுகள், அலுவலக நடைமுறைகள், பத்திரப் பதிவு தாமதங்கள், புரோக்கர்களின் தலையீடு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து உண்மை நிலையை அரசு அலுவலர்கள் கண்டறிய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
லஞ்சம் தொடர்பான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், அது குறித்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ தகவலின்படி, லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் குற்றமாகும்; லஞ்சக் கோரிக்கை தொடர்பான புகார்களை லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறையிடம் தெரிவிக்கலாம்.
எனவே, காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் நுகர்வோர்களிடம் கூடுதல் பணம் கேட்கப்படுகிறதா, புரோக்கர்கள் மூலம் கண்டுபிடிக்க முடியாத வகையிலும், எந்த கணக்கிலுமே தென்படாத வகையிலும், புரோக்கர்களை மையமாக வைத்து பணப் பரிவர்த்தனை நடைபெறுகிறதா, முறைகேடான பத்திரப் பதிவுகள் நடக்கிறதா..? பத்திரப் பதிவு பணிகள் திட்டமிட்டு தாமதப்படுத்தப்படுகிறதா..? என்பது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை, தமிழக முதல்வர் மற்றும் பதிவுத்துறை உயர் அலுவலர்கள் உரிய முறையில் விசாரணை நடத்த வேண்டும் என்பதே நுகர்வோரின் ஒற்றை கோரிக்கையாக உள்ளது.
பத்திரப் பதிவு அலுவலகங்களில் நுகர்வோர் அரசு நிர்ணயித்த கட்டணத்தைச் செலுத்தி, தங்களது பணிகளை வெளிப்படையாகவும், காலதாமதமின்றியும் செய்து கொள்ளும் வகையில் நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். ஏற்கனவே ஆன்லைன் என்று கூறிவரும் அனைத்திற்கும் மண்ணை வாரித் தூவி, கண்ணில் மிளகாய்ப் பொடி தூவும் சில லஞ்சப் பேர்வழிகள் அன்றாடம் அதிகரித்துத்தான் வருகின்றனர்.
காட்பாடி சார் பதிவாளர் அலுவலகம் தொடர்பாக எழுந்துள்ள இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து பதிவுத்துறை உயர் அதிகாரிகள் உடனடியாக விசாரணை நடத்தி, லஞ்ச ஒழிப்புத்துறை மறைந்து இருந்து கண்காணித்து கையும் களவுமாக பிடித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது துறை ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
அத்துடன் லஞ்ச பழத்தை வசூல் செய்யும் அலுவலக உதவியாளர் சத்தியமூர்த்தி மீதும் ஒரு கண் வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே நுகர்வோரின் ஒட்டுமொத்த ஒற்றை கோரிக்கையாக வலுப்பெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த வெங்கடேசன் வந்ததிலிருந்து காட்பாடியில் பதிவு என்பது நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.
அரசுக்கு வருவாய் கிடைக்காமல் பெருத்த இழப்பீடு ஏற்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. இவர் மீது உரிய விசாரணை நடத்தி இவரை நிரந்தரமாக பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று நுகர்வோர் தரப்பில் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலை நிலவ ஆரம்பித்து விட்டது குறிப்பிடத்தக்கது.

