ராமாயணம் படத்தில் குறைகள் இருக்கலாம்! ரசிகர்களிடம் யஷ் சொன்னது என்ன?

நிதிஷ் திவாரி இயக்கத்தில் ₹4000 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமான முறையில் ராமாயணம் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூரும் , ராவணன் கதாபாத்திரத்தில் கன்னட நடிகர் யாஷ்ஷும், ஹனுமான் கதாபாத்திரத்தில் சன்னி தியோலும் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தில் நடிப்பதற்காக இவர்கள் மூவருக்கும் மிகப்பெரிய தொகை சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது.

விபீஷணன் கதாபாத்திரத்தில் விவேக் ஓபராயும் நடித்துள்ளார். சீதை கதாபாத்திரத்தில் சாய் பல்லவியும், சூர்ப்பனகை கதாபாத்திரத்தில் ரகுல்பிரித் சிங்கும் நடித்துள்ளனர். ஆஸ்கர் விருதுகளை பெற்ற ஏ.ஆர்.ரகுமானும் , ஹான் சிம்மரும் முதன்முறையாக இணைந்து இந்த திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளனர்.

இரண்டு பாகங்களாகத் தயாராகி வரும் ராமாயணத்தின் முதல் பாகம் தீபாவளியை முன்னிட்டு வெளியாக உள்ளதாக, திரைப்பட தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில், நடிகர் யஷ் ரசிகர்களுக்கு முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அதாவது, ராமாயணம் படத்தில் தொழில்நுட்பம் தொடர்பான குறைகளை பெரிது படுத்தவேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு பெரிய கனவை நனவாக்குவதற்காக தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா தனது பெயரையும் பணத்தையும் பணயம் வைத்து உழைத்துள்ளார். படக்குழுவின் உழைப்பையும் நோக்கத்தையும் புரிந்துகொண்டு திறந்த மனதுடன் படத்தைப் பார்க்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial