தவெகவுக்கு ரூ.13.3 கோடி நன்கொடை வழங்கிய இரண்டு அமைச்சர்கள்

தமிழக முதல்வர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், 2025–26 நிதியாண்டில் ரூ.13.3 கோடி நன்கொடை பெற்றுள்ளது. இதில் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா மற்றும் ஆர்.வி. ரஞ்சித்குமார் ஆகிய இருவரும் இணைந்து ரூ.13.2 கோடி வழங்கியுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகம் 2025–26 நிதியாண்டில் நான்கு நன்கொடையாளர்களிடமிருந்து மொத்தம் ரூ.13.3 கோடி தன்னார்வ நன்கொடையாகப் பெற்றுள்ளது. இந்த விவரங்கள் இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட கட்சியின் நிதி அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

நன்கொடையில் 99% தொகை இரண்டு அமைச்சர்களிடமிருந்து வந்துள்ளது. ஆதவ் அர்ஜுனா ரூ.8.2 கோடியும், ஆர்.வி. ரஞ்சித்குமார் ரூ.5 கோடியும் வழங்கியுள்ளனர். தவெகவின் நன்கொடை விவரங்கள் வெளியாகியுள்ள நிலையில், அதிமுக மற்றும் திமுக பெற்ற நன்கொடை விவரங்களும் வெளிவந்துள்ளன.

கொல்கத்தாவில் பதிவு செய்யப்பட்ட டைகர் அசோசியேட்ஸ் என்ற லாட்டரி நிறுவனம் திமுகவுக்கு ரூ. 125 கோடி நன்கொடை வழங்கியுள்ளது. அதிமுகவுக்கு ரூ. 135 கோடி நன்கொடை வழங்கியுள்ளது. இதன் மூலம் திமுகவும், அதிமுகவும் இணைந்து ஒரே லாட்டரி நிறுவனத்திடமிருந்து ரூ. 260 கோடி நன்கொடை பெற்றுள்ளது.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial