தீபாவளி சிறப்பு சலுகை – ஐகூ ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.8,000 வரை தள்ளுபடி

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஐகூ நிறுவனம் தனது பிரபலமான ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைச் சலுகைகளை அறிவித்துள்ளது. ஐகூ ஸ்மார்ட்போனான ஐகூ 15 மாடலுக்கு அதிகபட்சமாக ரூ.8,000 வங்கி தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, ஐகூ Z11x மற்றும் Z11xa மாடல்களுக்கும் சலுகைகள் வழங்கப்படுகின்றன. இந்தச் சலுகைகள் அமேசான் இணையதளத்தில் கிடைக்கின்றன.

இந்த ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம், 256 ஜிபி சேமிப்புத் திறன் கொண்ட மாடலின் அசல் விலை ரூ.85,999. தற்போது தீபாவளி சலுகையின் கீழ் ரூ.77,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி சேமிப்புத் திறன் கொண்ட மாடலின் விலை ரூ.93,999-ல் இருந்து ரூ.86,999 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, ஐகூ Z11 5ஜி ஸ்மார்ட்போனுக்கும் தீபாவளி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாடலின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி சேமிப்புத் திறன் கொண்ட மாடலுக்கு ரூ.4,000 கூப்பன் தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதேபோல், 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்புத் திறன் கொண்ட மாடலுக்கும் ரூ.4,000 தள்ளுபடி கிடைக்கிறது.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});