AI மனிதர்களை இணைக்க வேண்டும்; பிரிக்கக் கூடாது: போப் லியோ

கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான பதிநான்காம் போப் லியோ, செப்டம்பர் 25 முதல் 28 வரை பிரான்சில் பயணம் மேற்கொள்ள உள்ளார். பாரிஸ், லூர்து மற்றும் மெட்ஸ் நகரங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க உள்ளார்.

போப் லியோவின் நான்கு நாள் பிரான்ஸ் பயணம் செப்டம்பர் 25-ம் தேதி தொடங்குகிறது. பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானை சந்திக்கும் அவர், யுனெஸ்கோ தலைமையகத்துக்கும் செல்ல உள்ளார்.

AI குறித்து போப் லியோ XIV-ன் கருத்து

போப் லியோ XIV-ன் பிரான்ஸ் பயணம் மதம் மற்றும் அரசின் உறவு குறித்த விவாதத்தை முன்னிலைப்படுத்தும் நிலையில், அவரது AI தொடர்பான கருத்துக்கள் முக்கியமாக பார்க்கப்படுகிறது.

AI வளர்ச்சியின் நோக்கம் ஒவ்வொரு மனிதரின் கண்ணியத்தையும் பாதுகாப்பதாகவும், மனிதர்களுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதாகவும் இருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மோதல் மற்றும் பிரிவினைகள் நிறைந்த உலகச் சூழலில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி வெறும் தொழில்நுட்ப அறிவை மட்டும் அடிப்படையாகக் கொண்டிருக்கக் கூடாது என்றும், ஞானம் மற்றும் பிறர் நலனில் அக்கறை ஆகியவற்றால் வழிநடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

செயற்கை நுண்ணறிவு மோதல்களைத் தடுப்பது, பேச்சுவார்த்தையை மேம்படுத்துவது, நல்லிணக்கத்தை உருவாக்குவது மற்றும் மக்களிடையே ஒற்றுமையை வளர்ப்பது போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படுவதற்கான வழிகளை ஆராய வேண்டும் என்றும் போப் லியோ XIV கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க : AI உலகை ஆள சீனாவின் புதிய திட்டம்.. 2030 இலக்கை நோக்கி வேகமெடுக்கும் போட்டி!

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial