நாம் தூங்கும்போது மூளைக்குள் என்ன நடக்கிறது? வியக்க வைக்கும் அறிவியல் உண்மைகள்!

நாம் ஒவ்வொரு நாளும் தூங்கும்போது நமது உடல் ஓய்வெடுக்கிறது. ஆனால், அந்த நேரத்தில் மூளையும் ஓய்வெடுக்கிறதா? பகலில் கற்றுக்கொண்ட விஷயங்களை இரவில் மூளை என்ன செய்கிறது? என்று நீங்கள் யோசித்தது உண்டா? மனித மூளை எப்படிச் செயல்படுகிறது? நாம் தூங்கும்போது அதற்குள் என்னென்ன மாற்றங்கள் நிகழ்கின்றன என்பதை அறிவியல் அடிப்படையில் விரிவாகப் பார்க்கலாம்.

மனித மூளை எப்படி செயல்படுகிறது?

மனித உடலில் மிகவும் சிக்கலான உறுப்புகளில் ஒன்று மூளை. நாம் சிந்திப்பது, பேசுவது, பார்ப்பது, கேட்பது, நடப்பது, உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது எனப் பெரும்பாலான செயல்பாடுகளையும் மூளைதான் ஒருங்கிணைக்கிறது. மூளையில் பல கோடி நரம்பு செல்கள் உள்ளன. இவை ஒன்றோடொன்று தொடர்புகொண்டு தகவல்களைப் பரிமாறிக்கொள்கின்றன.

உதாரணமாக, நாம் ஒரு பொருளைப் பார்க்கும்போது, மூளை அந்தத் தகவல்களைப் புரிந்துகொண்டு, நாம் பார்ப்பது என்ன என்பதை அடையாளம் காண்கிறது. அதேபோல், சூடான பொருளைத் தொடும்போது அதன் வெப்பத்தை உணர்ந்து கையை எடுத்து விடுகிறோம். இதுபோன்ற செயல்களுக்கு மூளையும் நரம்பு மண்டலமும் இணைந்து செயல்படுகின்றன.

இதையும் படிங்க : தூங்கும்போது திடீரென கீழே விழுவது போல உணர்வு வருதா? இதுதான் உண்மையான காரணம்!

தூங்கும்போது மூளை என்ன செய்கிறது?

நாம் தூங்கும்போது வெளிப்புறச் சூழலை உணரும் திறன் குறைகிறது. உடலின் அசைவுகள் குறைகின்றன. இதயத் துடிப்பும் சுவாசமும் பொதுவாக மெதுவாகின்றன. தினமும் நாம் தூங்கும் போது, உடனடியாக ஆழ்ந்த தூக்கத்திற்கு சென்றுவிடுவதில்லை. முதலில் லேசான தூக்கம் ஏற்படுகிறது. அதன் பின்னர் ஆழ்ந்த தூக்கத்திற்கு செல்கிறோம்.

ஆழ்ந்த தூக்கத்தின்போது, உடலுக்குத் தேவையான சில ஹார்மோன்கள் சுரக்கின்றன. பகலில் ஏற்பட்ட உடல் சோர்விலிருந்து மீண்டு வர உதவுகிறது. நாம் தூங்கும்போது உடல் மட்டுமல்ல, மூளையின் உணர்ச்சி தொடர்பான செயல்பாடுகளும் மாற்றமடைகின்றன. பயம், கோபம், மகிழ்ச்சி, கவலை போன்ற உணர்ச்சிகளுடன் தொடர்புடைய நினைவுகளை மூளை செயலாக்குகிறது.

போதுமான தூக்கம் கிடைக்கும்போது உணர்ச்சிகளைச் சமநிலைப்படுத்தவும் மன அழுத்தத்தைச் சமாளிக்கவும் உதவுகிறது. மாறாக, தொடர்ந்து தூக்கம் குறைந்தால் எரிச்சல், கவனக்குறைவு, மனநிலை மாற்றங்கள் மற்றும் முடிவெடுப்பதில் சிரமம் போன்றவை ஏற்படலாம்.

இரவில் ஏன் தூக்கம் வருகிறது?

மனித உடலில் இயற்கையான உயிரியல் கடிகாரம் ஒன்று உள்ளது. இது எப்போது விழித்திருக்க வேண்டும், எப்போது தூங்க வேண்டும் என்பதை ஒழுங்குபடுத்த உதவுகிறது. மூளையில் உள்ள ஹைப்போதாலமஸ் என்ற பகுதி இந்தச் செயல்பாட்டில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

பகல் நேரத்தில் சூரிய ஒளி கண்களை அடையும்போது மூளைக்கு விழிப்புடன் இருக்க வேண்டிய தகவல்கள் கிடைக்கின்றன. இரவு நேரத்தில் மெலட்டோனின் என்ற ஹார்மோனின் அளவு அதிகரித்து தூக்கம் வருவதற்கு உதவுகிறது. இதனால்தான் பொதுவாக இரவில் தூக்கமும் பகலில் விழிப்பும் ஏற்படுகின்றன.

இதையும் படிங்க : இரவில் படுத்தவுடன் தூக்கம் வரணுமா? இதை மட்டும் பண்ணுங்க போதும்.!

HTML tutorial