சிறையில் கட்டில், மெத்தை வசதி – அன்பில் மகேஷ்க்கு கிடைக்கும் சலுகைகள் என்ன?

கடந்த திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராகப் பதவி வகித்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் மற்றும் பிற சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடிக்கும் அதிகமாகப் பணம் வசூலித்ததாக புகார் எழுந்தது.

இந்த புகாரின் பெயரில் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை போலீசார் கைது செய்தனர். அவரை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இதற்கிடையே, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அன்பில் மகேஷுக்கு நீதிமன்ற உத்தரவின்படி முதல் வகுப்பு அறை ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

முதல் வகுப்பு கைதிகளுக்கான விதிகளின்படி, கழிப்பறை வசதியுடன் கூடிய தனி அறை, கட்டில், மெத்தை, மின்விசிறி, மேஜை மற்றும் நாற்காலி போன்ற வசதிகள் வழங்கப்படும். சிறையில் கைதிகளுக்கான சீருடைக்குப் பதிலாகச் சொந்த ஆடைகளை அணியவும் அனுமதி உண்டு.

சிறை விதிகளுக்கு உட்பட்டு கூடுதல் உணவுப் பொருட்கள், பத்திரிகைகள், தொலைக்காட்சி மற்றும் தொலைபேசி வசதிகளும் கிடைக்கும். மேலும், ரூ.1,000 வரை பொருட்கள் வாங்க அனுமதி உண்டு.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});