AI வந்தாலும் ரசிகர்கள் மாறமாட்டார்கள்? ; AI-க்கு எதிரானவரா டாம் குரூஸ்?

திரைப்படத் துறையில் AI முக்கிய பங்கு வகித்தாலும் அதே நேரத்தில், மனிதர்களால் உருவாக்கப்படும் படங்களைத்தான் ரசிகர்கள் விரும்புவார்கள் என பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் கூறியுள்ளார்.

லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் பங்கேற்றார். அப்போது, அவரிடம் திரைப்படத் துறையில் AI ஏற்படுத்தக்கூடிய மாற்றங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், மனிதர்களுக்கு நிகராக எதுவும் இல்லை. AI திரைப்படத் துறையில் வருவது தவிர்க்க முடியாதது. அதே நேரத்தில் படைப்பாளிகள் தொடர்ந்து படைப்புகளை உருவாக்க வேண்டும் என கூறினார்.

இதனுடன் தொடர்பாக, திரைப்படங்களை திரையரங்குகளில் பார்ப்பது தனித்துவமான அனுபவம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஸ்ட்ரீமிங் தளங்களுக்கு எதிரான நிலைப்பாடு தமக்கு இல்லை என்றும், ஆனால் திரையரங்கில் திரைப்படத்தை பார்ப்பது முற்றிலும் வேறுபட்ட கலை அனுபவம் என்றும் டாம் குரூஸ் தெரிவித்துள்ளார்.

AI தொழில்நுட்பம் திரைப்படத் தயாரிப்பில் எந்த அளவுக்கு பயன்படுத்தப்பட்டாலும், பார்வையாளர்களின் மனித அனுபவத்துக்கான விருப்பம் தொடரும் என்பதே அவரது கருத்தின் முக்கிய அம்சமாக உள்ளது.

டாம் குரூஸ் தற்போது ‘Digger’ திரைப்படத்தின் வெளியீட்டுக்காக தயாராகி வருகிறார். இந்த கதாபாத்திரத்திற்காக டாம் குரூஸ் தனது தோற்றத்தை மாற்றியுள்ளார். இதற்காக சிறப்பு மேக்கப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த மேக்கப்பிற்காக சுமார் ஆறு மணி நேரம் வரை எடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial