HomeTamilnaduசெயிண்ட்-கோபைன் நிறுவனத்தின் உற்பத்தி வளாகத்தை பார்வையிட்ட முதல்வர் விஜய்

செயிண்ட்-கோபைன் நிறுவனத்தின் உற்பத்தி வளாகத்தை பார்வையிட்ட முதல்வர் விஜய்

தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், சென்னை அருகே செயல்பட்டு வரும் முன்னணி உற்பத்தி நிறுவனங்களான செயிண்ட்-கோபைன் மற்றும் ரெனால்ட் நிசான் தொழிற்சாலைகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

முதலமைச்சரின் பயணம், செயிண்ட்-கோபைன் நிறுவனத்தின் உற்பத்தி வளாகத்தில் இருந்து தொடங்கியது. அங்கு தயாரிக்கப்படும் முக்கிய உற்பத்தி பிரிவுகளை அவர் பார்வையிட்டார்.

நிறுவனத்தின் மூத்த நிர்வாகிகளுடன் நடைபெற்ற சந்திப்பில், உற்பத்தித் திறன், தொழில்நுட்ப முன்னேற்றம், புதிய முதலீட்டு திட்டங்கள் மற்றும் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படவுள்ள விரிவாக்க முயற்சிகள் குறித்து விளக்கங்கள் பெறப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, சென்னை அருகே உள்ள ரெனால்ட் நிசான் கார் உற்பத்தி ஆலையை முதலமைச்சர் பார்வையிட்டார். அங்கு வாகன உற்பத்தி நடைமுறைகள், உற்பத்தி திறன் மற்றும் எதிர்கால வளர்ச்சி திட்டங்கள் குறித்து நிறுவன அதிகாரிகளிடம் விளக்கங்கள் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வு பயணத்தில் அமைச்சர்கள் எஸ். கீர்த்தனா, கே. தங்கராசு, ஆர்.வி. ரஞ்சித்குமார் ஆகியோருடன் தலைமைச் செயலாளர் எம். சாய் குமார் மற்றும் தொழில்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ். விஜயகுமார் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments