டெல்லியில் வேகமாக பரவும் H1N1, அதிகரிக்கும் மூச்சுத்திணறல் : மருத்துவர்கள் எச்சரிக்கை

டெல்லி-என்சிஆரில் H1N1 காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், சில நோயாளிகளுக்கு கடுமையான மூச்சுத்திணறல் மற்றும் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைதல் போன்ற சிக்கல்கள் ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

H1N1 என்றால் என்ன?

H1N1 என்பது ஒரு வகையான இன்ஃப்ளூயன்சா வைரஸ். இது மனிதர்களுக்கு காய்ச்சல் மற்றும் சுவாசப் பாதை தொற்று ஏற்படுத்தும். பொதுவாக இதை பன்றிக் காய்ச்சல் என்றும் அழைக்கிறார்கள்.

காய்ச்சல், இருமல், தொண்டை வலி, மூக்கு ஒழுகுதல் அல்லது மூக்கடைப்பு, தலைவலி, உடல்வலி, சோர்வு ஆகியவை இதன் அறிகுறிகளாக பார்க்கப்படுகிறது.

டெல்லியில் அதிகரிக்கும் H1N1 பாதிப்பு

டெல்லியில் 2026-ம் ஆண்டில் இதுவரை 1,344 பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டை விட இது சுமார் 6 மடங்கு அதிகமாகும்.

டெல்லி-என்சிஆரில் H1N1 மட்டுமின்றி பிற சுவாசத் தொற்று நோய்களும் அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். மாறிவரும் வானிலை காரணமாக காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

தீவிரமாகும் மூச்சுத்திணறல்

H1N1 பாதிப்பால் சிலருக்கு தொற்று தீவிரமடையும் போது சுவாசிப்பதில் சிரமம், ஆக்சிஜன் அளவு குறைவதாக கூறுகின்றனர். எனவே, இதுபோன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம் என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.

குறிப்பாக இதயம், நுரையீரல் மற்றும் நீரிழிவு போன்ற நீண்டகால உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
RELATED ARTICLES

Most Popular